Sunday, February 17, 2019

யாழ்.- கொழும்பு சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பஸ் மீது மீசாலையில் தாக்குதல்!

SHARE

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றின் மீது சாவகசேரியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணிக்கு தனியார் அதிசொகுசு பேருந்து மீது மறைந்திருந்து இரும்புக்கம்பியால் எறிந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் இவ்வாறு பேருந்துகள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE