Tuesday, February 5, 2019

கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை!

SHARE

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடளாவிய ரீதியிலுள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன.

பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் இணையம் மூலமாக கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்புக்கு வருவதனை குறைக்கும் நோக்கிலேயே பிரதேச மட்டத்தில் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது“ என தெரிவித்துள்ளார்.
SHARE