Tuesday, February 26, 2019

யாழ்.பல்கலை வளாகங்களுக்குள் நுழைய தொழிநுட்ப மாணவர்களுக்கு தடை!

SHARE

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உள்பட  அனைத்து பகுதிகளுக்கும் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

துணைவேந்தரின் அவசர அறிவித்தலுக்கமைய விடுதிகளில் தங்கியுள்ள தொழில்நுட்ப பீட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் இந்த இடைக்காலத் தடைக்கான காரணத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் தனது அறிவித்தலில் குறிப்பிடவில்லை.


SHARE