Thursday, February 28, 2019

விவசாய செய்கையின் வருமானத்தில் இயங்கும் மனிதநேய பாடசாலை!

SHARE

பாடசாலையில் செய்கை பண்ணும் தோட்டத்தின் வருமானத்திலேயே பாடசாலையை இயக்குகிறேன் என அல்வாய் இந்து தமிழ் கலவன் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பாடசாலையில் வாழை தோட்டங்கள், தென்னை மரங்கள் ,மரக்கறி பயிர்வகைகள் ,வீட்டுத்தோட்ட பயிர் இனங்கள் ,பாடசாலை வளாக பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது.

இது ஒரு மனிதநேய பாடசாலை எனவும் தோட்டத்தினால் கிடைக்கும் அறுவடைகளின் மூலம் மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அல்வாய் யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று காலை விஜயம் செய்திருந்தார்.

குறித்த பாடசாலையில் செய்கை பண்ணப்பட்டு வரும் விளை நிலபகுதிகளுக்கு குழாய் நீர் வசதிகள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.





SHARE