Saturday, February 16, 2019

வர்மா படத்தின் புதிய நாயகி யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு!

SHARE

வர்மா படத்தின் புதிய நாயகி யார் என்ற அறிவிப்பை  தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் ஆனது . விக்ரம் மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகம் செய்து ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இப்படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் படத்தை பார்த்த விக்ரம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் பாலா, ஒரிஜினல் கதையில் செய்த திருத்தத்தால் முழு படத்தையும் கைவிட்டதாக அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது.

மேலும் துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் புதிய இயக்குனர் மூலம் படத்தை இயக்கப்போவதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் புதிய வர்மா படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை தயாரிக்கும்  முகேஷ் வர்மா இப்படத்தின் புதிய நாயகி யார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தியில் வெளியான ‘அக்டோபர்’ படத்தின் அறிமுக நாயகி ‘பன்னிடா சந்து’ தான் ’வர்மா’ படத்தின் நாயகி என்று குறிப்பிட்டுள்ளனர்.

 
SHARE