Thursday, February 28, 2019

ஹாக்கி ப்ளேயராக ‘ஹிப் ஹாப் தமிழா’ – ‘நட்பே துணை’ ட்ரெய்லர்!

SHARE

‘மீசைய முறுக்கு’ படத்துக்கு பிறகு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்துள்ள ‘நட்பே துணை’ படத்தை பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார்.

பிரபல இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, ஆதி ஹாக்கி ப்ளேயராக நடித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


SHARE