Saturday, February 16, 2019

யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை!

SHARE

மின்சாரத் தொகுதி பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(17) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.ஈவினை,வயாவிளான்,குட்டியப்புலம், சுதந்திரபுரம்,செல்வநாயகபுரம்,அச்சுவேலி,தோப்பு ஒரு பகுதி, அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை,கதிரிப்பாய், தம்பாலை,இடைக்காடு,வளலாய்,விஜிதா மில்,நிலாவரை, சிறுப்பிட்டி, புத்தூர், வீரவாணி, ஊறணி, வாதரவத்தை, ஆவரங்கால்,பெரிய பொக்கணை,பூதர்மடம்,கோப்பாய், கோப்பாய் இராணுவ முகாம், இருபாலை, வசந்தபுரம், கட்டப்பிராய், இலங்க நாயகி, ஆடியபாதம் வீதி, நல்லூர், கல்வியங்காடு,திருநெல்வேலி ஒரு பகுதி,திருநெல்வேலி சந்தைப் பிரதேசம், திருநெல்வேலி பாற்பண்ணைப் பிரதேசம், ஆடியபாதம் வீதிச் சந்தி, யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE