Tuesday, February 26, 2019

சிவகார்த்திகேயன் புதிய படத்தின் தலைப்பு – கேட்டா அசந்துடுவீங்க!

SHARE

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படம் முடிந்த பின் அடுத்து விஷாலை வைத்து இரும்புத்திரை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.

ஒரு படத்திற்கு தலைப்பு மிகவும் முக்கியம். ஹீரோவாக நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், ‘ஹீரோ’ என்கிற தலைப்பே சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
SHARE