Tuesday, February 26, 2019

யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

SHARE

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம்போர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிகளுடன் பயணித்த சொகுசு பேருந்தே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநாச்சி வை்ததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறு காயங்களிற்குள்ளானவர்களிற்கு விபத்து இடம்பெற்ற பகுதியில் சிகிச்சைகள் இடம்பெற்றன.

யாழ் நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற கல் ஏற்றிய ரிப்பர் வாகனத்தில், அதி வேகமாக பயணித்த குறித்த பேருந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் சாரதி உதவியாளர் என அறியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

குறித்த விபத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த  செல்வராசா நகுலேஸ்வரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்
SHARE