Friday, February 22, 2019

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி – ‘சூப்பர் டீலக்ஸ்’ ட்ரெய்லர்!

SHARE

‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஃபகத் ஃபாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன்,பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின், மிருணாளினி ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

தியாகராஜன் குமாரராஜாவே தனது ‘Tyler Durden And Kino Fist’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


SHARE