Wednesday, February 27, 2019

Huawei Mate X 5G மடித்துவைக்கும் தொலைபேசி அறிமுகம்!

SHARE

Huawei நிறுவனம் தனது முதல் 5G தொழில்நுட்பத்தைக் கொண்ட மடித்துவைக்கக்கூடிய ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த Mobile World Congress Huawei நிறுவனம் தனது 5G மற்றும் மடிப்பு வசதி கொண்ட தொலைபேசியை Mobile World Congress நிகழ்ச்சியில்  வெளியிட்டது.

இந்நிலையில், Huawei Mate X தொலைபேசியின் விளம்பர போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் Mate X மடித்து வைக்கும் 5G வசதியுடன் இருக்கும் என்றும் உறுதியாகியுள்ளது.

கடந்த வாரம் ஐபோன் நிறுவனமும் தனது மடிப்பு தொலைபேசிக்கான வடிவமைப்புக்கு காப்புரிமை பெற்றுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் தனது மடிப்பு தொலைபேசியை வடிவமைக்கும் ஆப்பிள் நிறுவனம் எதிரிவரும் 2020ஆம் ஆண்டில்தான் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, Samsung நிறுவனம் தனது Galaxy Fold  மூலம் உலகின் முதல் மடிப்பு தொலைபேசியினை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE