Friday, March 1, 2019

‘மங்காத்தா 2’வுக்காக மீண்டும் இணையும் அஜித் – வெங்கட்பிரபு?

SHARE

2011-யில் அஜித் நடிப்பில் ரிலீஸான படம் ‘மங்காத்தா’. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் த்ரிஷா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், அஸ்வின், பிரேம்ஜி, மஹத், ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

‘க்ளவுட் நைன் மூவீஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகத்துக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தான் அவரை சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதனால் மீண்டும் அஜித் – வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு படம் உருவாகப்போவது உறுதி, ஆனா அது ‘மங்காத்தா 2’வா என்பது மட்டும் சஸ்பென்ஸ் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.
SHARE