Tuesday, March 5, 2019

வடக்கு – கிழக்கில் வீடமைப்பு வேலைத்திட்டதிற்கு 24 பில்லியன் ஒதுக்கீடு!

SHARE

குறைந்த வருமானம் பெறும் மலையகம், வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அப்பகுதி மக்களின் வீடற்ற பிரச்சினையை தீர்ப்பதற்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வடக்கு, கிழக்கில் 15 ஆயிரம்  கல்வீடுகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த கால யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கில் ஆயிரகணக்கான வீடுகள் பல்வேறு நிறுவனங்களின் உதவியுடன் கட்டப்பட்ட போதிலும் இன்னும் சுமார் ஒரு லட்சம் வீடுகளின் தேவை காணப்படுவதாக பிரதேச செயலகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE