Tuesday, March 5, 2019

3 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் கீர்த்தி சுரேஷ் படம்!

SHARE

இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘சர்கார்’. சமீபத்தில், கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரையுலகில் என்ட்ரியாகவுள்ளதாகவும், அந்த படத்தை போனி கபூர் தயாரித்து, அமித் ஷர்மா இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குகுநூர் இயக்கவுள்ளாராம். இதனை ‘ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது.
SHARE