Sunday, March 3, 2019

முகாமையாளர் இல்லாது இயங்கும் மாங்குளம் சமுர்த்தி வங்கி!

SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பிரதேசத்தில் இயங்கி வருகின்ற சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர முகாமையாளரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமுறுகண்டி, பனிக்கன்குளம், மாங்குளம், ஒலுமடு, அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு ஆகிய பல்வேறு கிராம மக்கள் இந்த வங்கியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு நிரந்தர முகாமையாளர் இல்லாமையினால் வங்கி நடவடிக்கைகளை பெறுகின்ற மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

குறித்த வங்கிக்கு நிரந்தர முகாமையாளரை நியமித்து தங்களுடைய சேவைகளை இலகுவாக பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE