Sunday, March 3, 2019

பகிரங்க மன்னிப்புக் கோருகின்றார் சிறிதரன் எம்.பி

SHARE

கிளி­நொச்­சி­யில் கடந்த 25ஆம் திகதி காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் நடத்­திய போராட்­டத்­தில் சிலர் நாக­ரிக­மற்ற முறை­யில் நடந்து கொண்­ட­மைக்­காக நான் பகி­ரங்க மன்­னிப்­புக் கோரு­கின்­றேன். சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் தெரி­வித்­தார்.

கிளி­நொச்­சி­யி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கிளி­நொச்­சி­யில் கடந்த 25ஆம் திகதி காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­கள் நடத்­திய போராட்­டத்­தில் சில பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளும் மேலும் சில­ரும் நடந்து கொண்ட விதம் தொடர்­பான செய்­தி­கள், காணொ­லி­களை நாம் பார்த்­தோம்.
அது தொடர்­பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தோம். அவர்­கள் நடந்து கொண்ட விதம் தவறு என்று கண்­ட­றிந்­தோம். அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அவர்­கள் நடந்து கொண்ட விதம் தொடர்­பி­லும், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளு­டன் நடந்து கொண்ட விதம் தொடர்­பி­லும் நான் பகி­ரங்­க­மாக மன்­னிப்­புக் கோரு­கின்­றேன்.

இதே­வேளை, அந்­தப் போராட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய சில­ரும் கலந்து கொண்­டி­ருந்­தார்­கள். அவர்­கள் கோபத்தை சீண்­டக் கூடிய வகை­யில் நடந்து கொண்­டார்­கள். இளை­ஞர்­கள் சிலர் அத­னால் உணர்வு தூண்­டப்­பட்டு அவ்­வி­தம் நடந்து கொண்­டுள்­ளார்­கள் – என்­றார்.
SHARE