Sunday, March 3, 2019

யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை!

SHARE
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.திருநெல்வேலிச் சந்தை,கலாசாலை வீதி, கோப்பாய் பொலிஸ் நிலையம், பாற்பண்ணை, GPS றோட், இராமலிங்கம் சந்த, இராமலிங்கம் சந்தியிலிருந்து முடமாவடி கிளிகடை வரை, பூங்கனிச் சோலை, நவாலி, மூத்த விநாயகர் கோயிலடி, சென் பீற்றர்ஸ் தேவாலயம், அரசடி, அட்டகிரி, வேலக்கை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE