Monday, March 18, 2019

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் வடக்கைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

SHARE

புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண்ணொருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரும், வவுனியாவைச் சேர்ந்த 38 வயதான ஆணொருவருமே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர்.

எனினும், விபத்தில் உயிரிழந்த மற்றுமொரு பெண் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்த நால்வரில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

டிப்பர் வாகன சாரதியின் கவனயீனமே, விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்தில் கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

புத்தளம் – சிலாபம் வீதியின் நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.45 மணியளவில் நேர்ந்துள்ளது.

கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுள் 3 பெண்கள் உள்ளடங்குவதோடு, உயிரிழந்த மற்றையவர் வீதியோரம் நின்றுகொண்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக டிப்பர் ரக வாகன சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
SHARE