Tuesday, March 5, 2019

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய தலைவர் அங்கஜன் இராமநாதன் கௌரவிப்பு!

SHARE

ஏழாலை தெற்கு விவசாய சம்மேளனத்தின் தலைவர் பாலசந்திரன் தலைமையில் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மயிலங்காடு கலாச்சார மண்டபத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்றிருந்தது.

விசேடமாக பிரதேசத்தில் பாழடைந்திருந்த 25 விவசாய கிணறுகளை புனரமைப்பதற்காக, விவசாய பிரதி அமைச்சராக சிறந்த சேவைகளை முன்னெடுத்தமைக்காக கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களை ,கிராம விவசாய பெருமக்கள் சார்பாக கௌரவித்திருந்தனர்.

36 ஆயிரம் ரூபா மானிய அடிப்படையில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் விவசாய பயனாளிகளுக்கு முன்னாள் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, ஞானமுருகன் மற்றும் ஞானகலா விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் நிர்வாக உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தார்.

ஞானகலா முன்பள்ளி, இளைஞர் நற்பணி மன்றம்,கிராம அபிவிருத்திகள் தொடர்பாக, பிரதேச மக்கள் சார்பாக எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றி தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ரதீஸ்வரன், காயத்திரி, வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் யாழ் மாவட்ட தலைவருமான பொன்னம்பலம் ஆதவன், வலிகாமம் இணைப்பாளர் திருஞானம் திருஞானசீலன்,செயற்பாட்டாளர்கள், சம்மேளன மற்றும் கழக உறுப்பினர்கள் பிரதேச விவசாய பெருமக்கள் என பலர் இணைந்திருந்தனர்.










SHARE