Tuesday, March 5, 2019

கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிக்கிறது!

SHARE

கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்டது.

பொதுவான கடவுச்சீட்டுக்கான கட்டணம் 500 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. புதிய கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாவாகும். ஒரே நாளில் கடவு சீட்டை பெறுவதற்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைவாக புதிய கட்டணம் 15 ஆயிரம் ரூபாவாகும்.

கடவு சீட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கட்டணம் 500 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான புதிய கட்டணம் ஆயிரம் ரூபாவாகும். இந்த புதிய கட்டணங்கள் மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
SHARE