Friday, March 1, 2019

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் மாநாடும் எழுச்சி பிரகடனமும்!

SHARE

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  ஏற்பாட்டில் மகளீர் மாநாடு இம்மாதம் 3 ஆம் திகதி [03.03.2019 ]  ஞயிற்றுக் கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.  தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியின்  மகளிர்  அணி தலைவியும்  நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான வாசுகி சுதாகரன்  தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் மகளீர் எழுச்சிப் பிரகடனம் , அரசியல் யாப்பும் தமிழர்களும், பெண்களும் அரசியலும், ஆகிய தலைப்புக்களில் வடக்கின் மிக முக்கிய ஆளுமைகளினால் கருத்தாடல்கள் இடம்பெறவுள்ளன . மேலும் இந்நிகழ்வில் தொன்மம் கலைக் குழுவின் தப்பாட்டம் , வடமராட்சி கலைஞர்களின் எழுச்சி இசை , மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணியின்  ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தின் பல் வேறு  கிராமங்களில்  கடந்த ஒருமாதகாலமாக இடம்பெற்ற பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனைவருக்குமான பரிசில்கள் வழங்குதலும்   கௌரவிப்பும் இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது,
SHARE