Sunday, March 10, 2019

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் சென்ற அனைவரும் பலி!

SHARE

149 பயணிகள் உட்பட 157 பேருடன் எத்தியோப்பியாவின் அடிஸ் அபா நகரிலிருந்து கென்யாவின் நைரோபி நோக்கி பயணித்த விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன்போது வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்ததையடுத்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

அதையடுத்து இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில், தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

இந் நிலையில் விமானத்தில் பயணிகள் 149 பேரும், விமானிகள், பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர்.

விபத்தினால் உயிரிழப்பு நேரிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானத்தில் சென்ற பயணிகள் 149 பேரும், விமானிகள் மற்றும் பணியாளர்கள் என 8 பேரும்  உயிருடன் இல்லை என்று அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அஹமத் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

விமானத்தில் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE