Sunday, March 3, 2019

மகாசிவராத்திரி விழா விஞ்ஞாபனம்!

SHARE

நிகழும் மங்கலகரமான விளம்பி வருடம் மாசி 20ம் நாள் (04.03.2019) திங்கட்கிழமை மகாசிவராத்திரியை முன்னிட்டு நாயன்மார்கட்டு திருக்குளக்கரையில் எழுந்தருளியிருக்கின்ற விநாயகப்பெருமானுக்கு மாலை 4.00 மணிமுதல் அடியவர்களுடைய  விஷேட பொங்கலும், மாலை 6.30 மணிக்கு விஷேட பூஜையும் நடைபெற திருவருள்கை கூடியுள்ளது.

நாயன்மார்கட்டு நாயன்மார் குருபூசை மடத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவலிங்கப் பெருமானுக்கு மகாசிவராத்திரி நன்நாளில் மாலை 6.00 மணிமுதல் அடியவர்கள் தங்கள் கரங்களினால் பால், தயிர், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்தும், சிவபுராண பாரயணம் செய்தும், மெய்யடியார்கள் ஆசாரசீலர்களாக வருகைதந்து மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொன்டு தங்களாலான திருத்தொண்டுகளைச் செய்தும் எம்பெருமானின் இஷ்டசித்திகளை பெற்றுஉய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

SHARE