Tuesday, April 16, 2019

சந்தேகத்துக்கு இட­மான முறை­யில் நட­மா­டிய நால்வருக்கு விளக்கமறியல்!

SHARE

யாழ்ப்பாணம் கீரி­ம­லைப் பகு­தி­யில் சந்தேகத்துக்கு இட­மான முறை­யில் நட­மா­டிய 4 பேரை எதிர்வரும் 22ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்ளது.

சந்­தே­க­ந­பர்­களை மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்று (திங்கட்கிழமை) மாலை முற்­ப­டுத்­தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கீரி­ம­லைப் பகு­தி­யில் சந்­தே­கத்­துக்கு இட­மா­கக் கூடி நின்­ற­வர்­க­ளி­டம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறித்த நால்வரும் காங்­கே­சன்­து­றைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்­டுள்­ள­னர்.

மேலும் அவர்­க­ளி­டமிருந்து 3 கத்­தி­க­ளும் கைக்­கோ­டரி ஒன்­றும் ஸ்குரு ரைவர், சுத்­தி­யல் போன்ற பொருற்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அத்­து­டன் 19 ஆயி­ரத்து 500 ரூபாய் மீட்­கப்­பட்­டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதே­வேளை கீரி­ம­லை பிர­தே­சத்­தில் உள்ள ஆல­யம் ஒன்­றில் நேற்று உண்­டி­யல் உடைத்­துத் திருட்டு நடை­பெற்­றுள்­ளது. அத்­து­டன் சில தினங்களுக்கு முன்­னர் பிர­தேச சபைக்­குச் சொந்­த­மான விளம்­ப­ரப் பதாதை ஒன்றும் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர்களுக்கும் இந்­த சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­புள்­ளதா என்ற கோணத்­தில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.
SHARE