Monday, April 15, 2019

சித்திரைப் புத்தாண்டு நாளில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்! (Video)

SHARE

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சித்திரைப் புத்தாண்டு விசேட பூசை வழிபாடுகளில் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும், வெளியிடங்களிலிருந்தும் வருகை தந்த பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.




















SHARE