பணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...!



பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காட்டி வரவும். இதனால் செல்வம் பெருகும். இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பணபெட்டியில் வைத்து வர பணவரவு பெருகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒரு வழியாகும்.

புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண மிகும் நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து  வர வேண்டும். மேலும் மூன்று  நாட்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்.

 அதிகாலை 5 மணிக்கு முன் வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும். அதிகாலை விழித்தவுடவுன் பசு அல்லது தனது முகத்தை அல்லது தனது வலது உள்ளங்கையை முதலில் பார்க்க வேண்டும்.

 செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும்  தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ கூடவே சிறிது எடுத்து  செல்லலாம். 

 வெந்தயம் சிறிது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும். 

வீட்டில் கிழக்குப் பக்கம் துளசிச் செடி அல்லது வேப்ப மரம் இருந்தால் மிகவும் நல்லது. தீய சக்திகளும் எதிர்மறை செயல்களும் உங்களை  நெருங்காது.

 நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவை எண்ணெயில் 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் மந்திர சக்தியும், செல்வமும் கொழிக்கும்.

أحدث أقدم