திருமணத்தில் பொருத்தங்கள் பார்ப்பது எப்படி?

 

திருமணம் என்றாலே முதலில் பார்ப்பது ஜாதகம்தான்.இது பொருந்தி வந்த பிறகுதான் அடுத்த கட்ட பேச்சையே தொடங்குவார்கள்.ஜாதகத்தில் திருமணம் தொடர்பாக 10 பொருத்தங்கள் உண்டு. 10 பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் ஆகும். இதில் மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் ஆகிய இரண்டும் இல்லற வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும். ஜாதகத்தில் உள்ள 10 பொருத்தங்கள் பற்றி இங்கு காணலாம்.

1.தினப் பொருத்தம்: இதனை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2.குணப் பொருத்தம்: ஆண், பெண் இருவரும் எப்படிப்பட்ட குணம் உள்ளவர் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

3.மகேந்திரப் பொருத்தம்: இந்த பொருத்தம் இருந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

4.ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்: வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

5.யோனிப் பொருத்தம்: கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது.

6.ராசிப் பொருத்தம்: இந்த பொருத்தம் இருந்தால்தான் வம்சம் விருத்தியாகுமாம்.

7.ராசி அதிபதிப் பொருத்தம்: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம்தான் ராசி அதிபதிப் பொருத்தம்.

8.வசியப் பொருத்தம்: கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது.

9.ரச்சுப் பொருத்தம்: இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது.

10.வேதைப் பொருத்தம்: திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப – துன்பங்கள் எவ்வாறு அமையும், என்பதை கணிக்கக்கூடியது.

Previous Post Next Post