4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா?

4 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணம் இருக்கும். விட்டுக் கொடுக்கும் பண்பாக பேசத் தெரியாது.

பிறருடைய அந்தஸ்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.


எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.

சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள்.

இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும்.

தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள்.

எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள்.

நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள்.


அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர்களாகவே இருப்பார்கள்.

5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
Previous Post Next Post