பேராபத்துகளை ஏற்படுத்தும் வாழைப்பழம்! இவ்வளவு பக்கவிளைவுகளா? யார் யார்ரெல்லாம் சாப்பிட கூடாது?

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் முதலில் வாழைப்பழத்தைச் சொல்லலாம்.

முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் பிரச்சினை இல்லாமல் இருப்பதற்காக கொடுக்கப்படுகிறது.

வாழைப்பழத்தில் நம்முடைய உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் சி, வைட்டமின் பி12, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வாழைப்பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது நிறைய பக்க விளைவுகளை உண்டாக்குகிறது.

அவை என்னென்ன என்று இங்கே பார்ப்போம்.

  • தினமும் 1 அல்லது 2 பழங்கள் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிட்டடால் அதுவே எடையை அதிகரிக்கவும் செய்யும். வாழைப்பழத்துக்கு எடையை அதிகரிக்கும் தன்மையும் உண்டு.
  • அதிலும் சமீப காலங்களில் கிடைக்கின்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழத்தைத் தவிருங்கள்.
  • நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் அரை வயிறு மட்டும் சாப்பிடுவார்கள். அதிகம் சாப்பிட்டால் வேலை பார்ப்பது கடினமாகிவிடும் என்பதால் குறைவாக சாப்பிடுவது பழக்கம்.
  • அதிலும் சிலர் இரண்டு வாழைப்பழங்களை மட்டும் சாப்பிட்டுக் கொள்வார்கள். இரவில் கண் விழித்து வேலை பார்ப்பவர்கள் நிச்சயம் இரவில் வாழைப்பழம் சாப்பிடவே கூடாது.
  • வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்கள் இது கார்போ ஹைட்ரேட்டுகளுடன் சேர்ந்து சோம்பல் உணர்வை ஏற்படுத்துகிறது. அதோடு இரவு நேர தலைவலியையும் ஏற்படுத்தும்.
  • வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால், உடலின் ரத்த இயக்கத்தில் மாறுபாட்டை ஏற்படுத்தும். குறிப்பாக, குறைந்த ரத்த அழுத்தப்ப பிரச்சினை உள்ளவர்கள் அளவுக்கு மேல் வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது.
  • மேலும் ரத்த அழுத்தத்திற்காக மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்பவர்கள் வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
  • பொதுவாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் மிகக் குறைவாக வாழைப்பழம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • ஏனெனில் இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். அதனால் நீரழிவு பிரச்சினை உள்ளவர்கள் இரவு நேரங்களிலும், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • சர்க்கரை அளவு சராசரியாக இருப்பவர்களும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகரக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

Previous Post Next Post