வாழ்வில் துரதிர்ஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?

தங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டமே இல்லை என்று வருந்தும் சிலருக்கு திடீரென அதிர்ஷ்டம் கொட்டோ, கொட்டெனக் கொட்டிவிடும். அதன் பிண்ணனியில் சிலருக்கு உழைப்பு இருக்கும். சிலருக்கு அதிர்ஷ்டம் காரணமாக இருக்கும்.

எதார்த்தமாக சில விசயங்களைப் பார்த்தால் அதிர்ஷ்டம் கொட்டோ, கொட்டென கொட்டும். வாருங்கள் அவை எதெல்லாம் எனத் தெரிந்துகொள்ளலாம்.எங்காவது நாம் கிளம்பிச் செல்லும் வழியில் பிரேதத்தையோ, இறுதி ஊர்வலத்தையோ பார்ப்பது அதிர்ஷ்டம். இறுதி ஊர்வலத்தைப் பார்க்கும்போது கடவுளை வணங்கவேண்டும். அதேபோல் புதிதாக பிறந்த கன்றுக்குட்டி தன் தாயிடம் பால் குடிப்பதைப் பார்ப்பதும் அதிர்ஷ்டம்.

வானவில்லைப் பார்ப்பதும் நம் வாழ்வில் செல்வத்தைத் தரும். பெண் பறவைகளைப் பார்த்தால் நம்மை நோக்கி அதிர்ஷ்டம் வரப்போவதாக அர்த்தம். அதே நம் வீட்டை நோக்கி வந்தால் பணம் வரப்போவதாக அர்த்தம். 

அதேபோல் எங்கோ சென்று கொண்டிருக்கும் போது வழியில் யானையைப் பார்ப்பது அந்த பயணத்தை வெற்றியாக்கும். அப்படி யானையைப் பார்ப்பது நாம் வினாயகரையே பார்ப்பதற்குச் சமம். எதேச்சையாக வாகன எண்ணிலோ, வேறு ஏதோ வகையிலோ 7 என்னும் எண் நம்மைத் தொடர்ந்து வந்தால் அதிர்ஷ்டன் தேடிவரபோவதாக அர்த்தம்.பிறைநிலாவைப் பார்ப்பதும் அதிர்ஷ்டம். நான்கு இதழ் கொண்ட புல் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்தது. இது வீட்டை கண் திருஷ்டியில் இருந்தும் காக்கும். இதேபோல் நம் வீட்டில் குருவி கூடு கட்டினாலும் அதிர்ஷ்டம் தேடிவரும் என அர்த்தம். 

வீட்டின் கதவில் குதிரை லாடத்தை தொங்கவிடுவது எதிர்மறை சக்தியை விரட்டி நேர்மறை சிந்தனையை அதிகரிக்கும். வாழ்வில் எதார்த்தமாக ஆமையைப் பார்ப்பதும் அதிர்ஷ்டமாகும். ஆமை நீள் ஆயுளைக் குறிக்கும்.
Previous Post Next Post