ஏழரை சனியிலிருந்து விடுபட பரிகாரங்கள் இதோ...

சனியால் கிடைக்கும் பலன்கள் எந்த அளவிற்கு அதிகமானதோ அதே போல பாதிப்புகளும் அதிகம் இருக்கும்.

அதுவும் ஏழாரை சனி என்றால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இதிலிருந்து விடுபட சிறுசிறு பரிகாரங்களை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

பச்சரிசி பரிகாரம்

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும்.

பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம்.

அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.

நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

சனிபகவான் பாதிப்புகள் தப்பிக்க உதவும் வழிமுறைகள்

  • அனுமாரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் குறையும்.
  • ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கலாம்.
  • தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கலாம்.
  • சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
  • தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
  • சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
  • சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
  • கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
  • வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
  • விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். வீட்டின் பூஜை அறையில் விநாயகரின் படம் மற்றும் சனி பகவானின் இரும்பு உருவம் கொண்ட படத்தை வைத்து பூஜை செய்யலாம்.
  • வீட்டில் விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்கிய பின் கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும்.
  • சனி பூஜை அன்று ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்கினால் மிகவும் நல்லது.
  • பூஜையின் இறுதி நாளில் அனுமான்,சிவன் மற்றும் சனி பகவான் கோயிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு வர சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.


أحدث أقدم