செலவே இன்றி முகத்தை அழகாக மாற்றனுமா? வாரத்தில் ஏழு நாட்கள் இவற்றை செய்தாலே போதும்!

 

இன்றைய கால பெண்களுக்கு எப்போதும் தங்களது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதிக கவனம் செலுத்துவார்கள்.

இதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிறீம்களை அதிகம் பணம் செலவழித்து வாங்கி பயன்படுத்துவதுண்டு. இருப்பினும் இது நிரந்த அழகினை தராது.

எவ்வித பக்கவிளைவுகளுமின்றி வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு கூட முகத்தை அழகாக வைத்திருக்க முடியும்.

அந்தவகையில் செலவே இன்றி முகத்தை அழகுப்படுத்த தினம் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள்.

  • திங்கள் கிழமை தேன் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 துளி எலுமிச்சை கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். முகம் அழுக்கில்லாமல் ஜொலிக்கும்.
  • செவ்வாய் கிழமை ஸ்ட்ரா பெர்ரி சதைப் பகுதியை மசித்து அதனுடன் பால் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகம் சுருக்கம் போய், இளமையாக இருக்கும்.
  • புதன் கிழமை யோகார்ட் ஈரப்பதம் அளிக்கும். யோகார்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை, அழுக்கு அகன்று மென்மையாக மாறும்.
  • வியாழக் கிழமை கடலை மாவில் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவுங்கள். சருமம் தளர்வடைவது குறைந்து இறுகும். வயதான தோற்றத்தை தடுக்கும்.
  • வெள்ளிக்கிழமை முல்தானி மட்டியில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகம் தொய்வடையாமல் பாதுகாக்கும்.
  • சனிக் கிழமை சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளித்தால் என்றும் இளமை இருக்கலாம்.
  • ஞாயிறுகளில் அரிசி வேக வைத்த நீரில் அல்லது அரிசி கஞ்சியை எடுத்து முகத்தில் தடவுங்கள். முகம் கெட்டியாக இறுகியதும் முகம் கழுவினால் சருமம் பளபளக்கும்.

أحدث أقدم