பொதுவாக இன்றை சூழலில் மாசுபாடு, மோசமான உணவு பழக்கம், ரசாயனங்களின் பயன்பாடு போன்றவை சருமத்துக்கு தீங்கு விளைவிக்க கூடியவை.
அதில் முக்கியமானது முகப்பரு. இது வந்துவிட்டாலே போதும் முகத்தின் அழகையே பாழாக்கி விடுகின்றது.
இதனை போக்க கண்ட கண்ட கிறீம்களை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. இதனை எளிய இயற்கை முறையில் போக்கி கொள்ள விரும்புவர்கள் வேப்பிலை தேர்வு செய்யலாம்.
ஏனெனில் வேப்பிலை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளை கொண்டிருக்கிறது. இதனால் முகப்பருவை விரட்ட இது சிறந்த மூலிகையாகும்.
அந்தவகையில் வேப்பிலையை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
தேவையானவை
- வேப்பிலை விழுது - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- வறட்சியான சருமம் இருப்பவர்கள் - வெண்ணெய் சிறிதளவு சேர்க்கலாம்.
செய்முறை
முதலில் வேப்பிலை விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து வெண்ணெய் கலந்து பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும்.
தேவையெனில் சிறிதளவு பன்னீர் கலந்து குழைத்து முகம் முழுக்க தடவவும்.
இதை முகம் முழுக்க தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு உங்கள் சருமத்துக்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்தலாம் .