பெண்களே செலவே இல்லாமல் உங்கள் உதடு ஜொலிக்க வேண்டுமா?


முகத்தின் அழகினை நிர்ணயிப்பதில் உதடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

இருப்பினும் இது சிலருக்க கருமையடைந்து சுருக்கங்கள் ஏற்பட்டு அசிங்கமாக காணப்படுவதுண்டு.

குறிப்பாக கண்ட கண்ட கிறீம்களை முகத்திற்கு பாவிப்பதனால் கூட உதடு கருப்பாக மாறும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது உதடு கருமையின்றி இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

  • எலுமிச்சை சாறினில், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து உதட்டினில் தடவவும். பின் 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். தினமும் இவ்வாறு செய்வது உதட்டின் கருமையை நீக்க உதவும்.
  • தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவலாம் .யோகார்ட் இல்லையெனில், தயிர் உபயோகிக்கலாம்.
  • தக்காளி துண்டை எடுத்து உதட்டை சுற்றிலும் உள்ள கருமை மீது தடவி வந்தால், அது கருமையை நீக்க உதவும். மேலும் இது உதட்டிற்கு ஈரப்பதம் அளிக்கும்.
  • உருளைத்துண்டு மற்றும் வெள்ளரி சாறெடுத்து உதட்டின் மீது தினசரி தடவவும். இது உதட்டிற்கு ஈரப்பதம் அளித்து, கரிய உதட்டினை சிவப்பாக்கும்.
  • உதட்டின் ஈரப்பதம் குறைந்தால், கருமை ஏற்படுகிறது; எனவே, அதன் கருமையை போக்க தினமும் வெண்ணெய் தடவவும்.
  • ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெயும் உதட்டிற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக்கி, கருமையை நீக்கும்.
  • ரோஸ் வாட்டர் உதட்டின் கருமையைப் போக்க சிறந்தது; இந்நீரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டைச் சுற்றிலும், தினமும் இரவு படுக்கச் செல்லுமுன் தடவவும், இது உதட்டின் கருமையை நீக்கி, உதட்டினை சிவப்பாக்கும்.


Previous Post Next Post