இந்த கருப்பு உணவு பொருளில் தயாரிக்கப்படும் சக்தி வாய்ந்த டீயை தினமும் குடிங்க! எடை சீக்கிரமா குறையும்

 

கருப்பு மிளகு இது கீல்வாதம் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குமிகவும் பயனளிக்கிறது.

இது பொதுவாக சளி, இரும்பல் போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இக்கட்டுரையில் மிளகு டீயின் நன்மைகள் பற்றியும் உடல் எடையை குறைக்க உதவுவது பற்றியும் காணலாம்.

எடை இழப்புக்கு கருப்பு மிளகு

கருப்பு மிளகு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் நிரம்பியுள்ளது. அதனால், இது ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆகிறது. இது பல சுகாதார நோய்களை குணப்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

கருப்பு மிளகு பைபரின் கொண்டுள்ளது. இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்திறனை மேம்படுத்துகிறது.

இந்த கலவை உண்மையில் உங்கள் உடலில் கொழுப்பு சேருவதை குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.

கருப்பு மிளகு தேநீர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு
  2. சிறிதளவு இஞ்சி வேர்
  3. 1 தேக்கரண்டி தேன்
  4. சிறிதளவு எலுமிச்சை சாறு
  5. 1 கப் தண்ணீர்

தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர், கருப்பு மிளகு மற்றும் அரைத்த இஞ்சி வேரை சேர்க்கவும்.

5 நிமிடங்கள் தண்ணீர் கொதிக்க விடவும், பின்னர் அடுப்பை அணைக்கவும்.

ஒரு கோப்பையில் தேநீரை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.

இப்போது சுவையான மிளகு டீ ரெடி!

Previous Post Next Post