அசிங்கமாக இருக்கும் அக்குள் கருமையை மாயமாக்க வேண்டுமா?


பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி அக்குளிலில் கறுப்பாக படை மாதிரி இருக்கும். அது படை கிடையாது. ஆனால் பார்ப்பதற்கு அந்த மாதிரியாக தான் இருக்கும். இதனால் ஆண்களை விட பெண்களுக்குதான் கவலை அதிகமாக இருக்கும்.

உடலிலேயே அக்குள் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால்தான் அங்கு வியர்வை அதிகமாக வருகிறது. இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அப்படியே தேங்கி இருப்பதால் ஒருவிதமான கருப்பு படலமாக உருவாகுகிறது. இது அக்குளின் அழகையே பாழாக்கி விடுகிறது.

அக்குள் பகுதியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அக்குளை சுத்தமாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்வது அவசியம்.

  • முதலில் அக்குளில் வளரும் முடி அவ்வப்போது அகற்ற வேண்டும். அக்குளில் முடி இருந்தால், அதுவே அக்குளின் கருமையை இன்னும் அதிகமாக வெளிக்காட்டும். அக்குள் முடியை ஷேவிங் மூலம் நீக்குவதை விட, வேக்சிங் மூலம் அகற்றுவதே மிகவும் சிறந்த வழி. வேக்சிங் செய்வதால் அக்குள் கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.
  • நல்ல தரமான சரும கருமையைப் போக்கும் ஸ்க்ரப் க்ரீம்களைப் பயன்படுத்தி வரலாம். இதனால் அக்குள் கருமை நாளடைவில் போகும். இப்படி வாரத்திற்கு 2 முறை அல்லது 2 முறைக்கு மேலும் செய்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
  • தினமும் குளிக்கும் போது அக்குளை நன்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். அப்படி தினமும் ஸ்கரப்பர் பயன்படுத்தும் போது, மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த மறக்கக்கூடாது. மேலும் மாய்ஸ்சுரைசரை இரவில் படுக்கும் முன்பு அக்குள்களில் பயன்படுத்தி வந்தால் மிகவும் நல்லது.
  • கற்றாழை ஜெல்லை தினமும் அக்குளில் தடவி ஊற வைக்கலாம். அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அக்குளுக்கு நல்ல பாதுகாப்பை தரும்.
  • உருளைக்கிழங்கில் உள்ள உட்பொருட்கள் அக்குள் கருமையைப் போக்கும் வல்லமை கொண்டது. உருளைக்கிழங்கை வெட்டி, ஒரு துண்டை அக்குளில் தேய்த்து, 15 நிமிடம் கழித்துக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இதை தினமும்கூட செய்யலாம்.
  • முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி இறுக்கமான உடைகளை அணிந்தால், அது அக்குளை மேலும் கருமையாக்கிவிடும். ஆகவே சற்று தளர்வான மற்றும் சௌகரியமான உடைகளை பயன்படுத்துவது நல்லது.
  • தரம் குறைவான அல்லது மிகவும் ஸ்ட்ராங்கான டியோடரண்ட்டுகளை அக்குளில் நேரடியாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த பொருட்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள், அக்குளை கருமையாக்கிவிடும். அக்குளில் வியர்வை துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க, டியோடரண்ட்டுகளுக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு எலுமிச்சையை தினமும் அக்குளில் தேய்த்து வந்தால் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.
  • இரவில் உறங்கச் செல்வதற்கு முன் அக்குள் பகுதியில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாடி பட்டர்களைத் தடவி வந்தால் சில நாட்களில் கருமை நிறம் நீங்கும்.
  • குளித்து முடித்த பிறகு, எலுமிச்சைச் சாற்றுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து காட்டன் துணியில் தொட்டு அக்குள் பகுதியை ஸ்கிரப் செய்யலாம். இதனால் நாளடைவில் கருமை நீங்கி அக்குள் பளிச்சிடும்.


Previous Post Next Post