ஒவ்வொருநாளும் ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

 ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

4000 ஆண்டுகளான பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையான ஏலக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

  • பசி எடுக்காமல் இருப்பவர்கள், உணவு சரியாக ஜீரணம் ஆகாதவர்கள் தினமும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர உடலின் மெட்டபாலிஸம் அதிகரிக்கும். ஜீரண உறுப்பை வலுவடைய செய்து, ஜீரண நீரை சுரக்க செய்யும். இதன் மூலம் நன்றாக பசி எடுக்கும்.
  • அதிக மார்பு சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் அதிக இருமலினால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை தினமும் மென்று வர நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும்.
  • ஜீரண உறுப்புகளில் ஏதேனும் கோளாறு இருந்தால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை சாப்பிட்டு வர துர்நாற்றத்தை போக்கி, நல்ல மணத்தை கொடுக்கும்.
  • வாய்ப்புண், பற்சொத்தை, பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று வர வேண்டும்.
  • வாகனங்களில் பயணம் செய்யும் போது மற்றும் வெயிலில் செல்லும் போது ஒரு சிலருக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும். இதற்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது.

Previous Post Next Post