சுவையான தக்காளி புலாவ்


தேவையான பொருட்கள்

புலாவ் அாிசி - 500 கிராம்
தக்காளி பழம் - 500 கிராம்
வெங்காயம்(பெரியது) - 150 கிராம்
நெய் - 100 கிராம்
மிளகாய்த் தூள் -  2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிமசால் பொடி - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு(பெரியது) - 1
பச்சை மிளகாய் - 4
கொத்துமல்லி தழை - தேவையான அளவு
கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு

செய்முறை

புலாவ் அாிசியை நன்றாகக் கழுவி, களைந்து உதிாியாக இருக்கும் விதத்தில் வேகவைத்துக் கொள்ளவும்.

தக்காளிப்பழம் வெங்காயம் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக்கொண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அம்மியில் வைத்து நைந்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னா் ஒரு பாத்திரத்தை வைத்து நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், கடுகைப் போட்டு பொாிந்ததும் நைந்து வைத்துள்ளதை அதில் போட்டு கறிவேப்பிலையும் போட்டு தாளிக்கவும்.

அதன் பின்னா் தக்காளி வெங்காயத்தை போட்டு நன்றாகக் கிளறி வேகவிடவும். ஓரளவு வெந்ததும் கறிமசால் பொடியைப் போட்டு அரை கப் நீா் ஊற்றி தேவையான உப்பைச் சோ்த்து நன்றாகக் கிளறி மேலே மூடி வேக விடவும்.

நீா் வற்றி நெய் மேல்பகுதியில் மிதக்கும்போது வேகவைத்துள்ள புலாவ் அாிசி சாதத்தைக் கொட்டி கிளறி சிறிது சூட்டில் வைத்து கீழே இறக்கிவிடவும்.


 


Previous Post Next Post