உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எண்ணை வழியும் முகத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும். இவ்வாறு செய்து வந்தால் கறுத்துப் போவது, வறண்டு போவது, மற்றும் பருக்களிலிருந்து முகத்தைக் காப்பாற்றலாம்.
சருமத்தின் நிறத்தை நிர்ணயம் செய்வது மெலனின் எனப்படும் நிறமிகள். இவை சருமத்தின் அடியில் கூடக்கூட நிறம் குறையும். நிறம் குறைவதற்கு காரணம் என்னவென்றால் நாம் வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தின் கீழே உள்ள இந்த நிறமிகள் சருமத்தின் வெகு அருகில் வருகின்றன. அதனால் தான் வெயிலில் அலைபவர்களுக்கு உடம்பு கருக்கிறது.
வெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பஞ்சை இந்த சாற்றுக் கலவையில் முக்கி முகம் பூராவும் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும்.முகம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.
ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும்.
கசகசாவில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும். முகம் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருக்கும்.
முள்ளிக்கி சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்து வந்தால் முகம் நல்ல நிறம் பெறும்.