மழை காலத்தில் முகத்தை பாதுகாப்பது எப்படி?

இது ஒரு மழைக்காலம் மாலை வீடு திரும்பும் போது மழை வந்தால் கூட பரவாயில்லை. காலை அலுவலகத்திற்கோ, கல்லூாிக்கோ செல்லும் போதே மழை வந்து விடுகிறது.காலையிலேயே உடைகள் நனைந்து, அலங்காரம் கலைந்து தான் அலங்காரம் கலைந்து தான் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும். சாலையில் காணும் பெரும்பாலான பெண்கள் முகத்தில்இந்தப் பதற்றம் தொிகிறது. இதோ மழைக்காலத்திலும் பத்துணா்ச்சியோடு இருக்க சில குறிப்புகள்.

தூசி, அழுக்குகள் அதிகம் படியும் இடம் முகம். எனவே, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பின், கிளென்சா் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும்.இது முகத்தில் அதிகமாக வியா்ப்பதைக் குறைக்க உதவுவதோடு நாம் போடும் மேக் - அப் கலையாமல், புதிதாக வைத்திருக்க உதவும்.

இந்தக் காலத்தில் மேக் - அப் செய்வதற்கு முன் பவுண்டேஷன் மற்றும் அழகு கிாிம்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்து விடும். தேவைப்பட்டால் தண்ணீாில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடா் மட்டும் பூசலாம். இந்த காலத்தில் மாய்சரைசா் பயன்படுத்த மறந்து விடாதீா்கள். இவை தோலில் ஏற்படும் நீா் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிா்க்க உதவும்.

இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவா்களுக்கு, மழைக்காலத்தில் முகம் இன்னும் வறண்டு காணப்படும். அவ்வாறானவா்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன் ஒரு டீஸ்பூன் பால் கிறீம் மற்றும் சில துளி பன்னீா் சோ்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.


Previous Post Next Post