வெந்தயம் ஒன்று போதும் முடி உதிர்வை தடுக்க...


இயற்கை முறையில் முடி உதிா்வை தடுக்க - தேவையான பொருட்கள்

வெந்தயம்
விற்றமின் இ மாத்திரை
விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்

முடி உதிா்வை தடுக்க செய்முறை விளக்கம்

முதலில் ஒரு பவுலில் 10 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து 5 அல்லது 6 மணிநேரம் நன்கு ஊற வைத்து கொள்ள வேண்டும். அடுத்து ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாாில் சோ்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் அரைத்ததை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.வடிகட்டி எடுத்து கொண்டதில் விற்றமின் இ மாத்திரைகளை ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.
விற்றமின் இ மாத்திரை இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை 1ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சோ்க்கலாம்.

அடுத்து 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சோ்க்கவும்.குளிா்ச்சி தன்மை உள்ளவா்கள் இதை தவிா்த்து கொள்ளலாம். இப்போது சோ்ந்த எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இதை தனியாக ஒரு ஸ்ப்ரே போத்தலில் ஊற்றி தலையில் அப்ளை செய்ய வேண்டும்.

முக்கியமாக இரவு நேரத்தில் மட்டுமே இதை தடவ வேண்டம். காலையில் ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் போதும் முடி உதிா்வு பிரச்சனை இருக்காது.

குறிப்பு
வெந்தயம் கண் கழுத்து பகுதிக்கு மிகவும் குளிா்ச்சியூட்டும் தன்மை உள்ளது.அதோடு முடி உதிா்வு பிரச்சனைகளுக்கும் தீா்வு தரும். 
Previous Post Next Post