உங்களது கால்களை சுத்தம் செய்வது எளிய வழி?


  • முகம் கழுவும்போதோ, குளிக்கும்போதோ நிறைய பேர் கால்களை நன்றாக கழுவமாட்டர்கள். கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லவிட்டால் பாக்டீரியாக்கள் படிந்து எளிதில் நோய் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். கால்களில் படியும் வியர்வையை போக்குவதற்காகவும் நன்றாக கழுவ வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பாக்டீரியாக்கள் படிந்து எளிதில் நோய் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். கால்களில் படியும் வியர்வையை போக்குவதற்காகவும் நன்றாக கழுவ வேண்டியது அவசியம்.இல்லாவிட்டால் துர்நாற்றம் வீசும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கால்களை சுத்தம் செய்வது குறித்து பார்ப்போம்.
  • கால்களை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடாவை உபயோகிக்கலாம். அது பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதோடு வியர்வையின் பி.எச். அளவையும் சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. ஒருலிட்டா் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அந்த நீரில் கால்களை கால் மணி நேரம் முக்கிவைக்க வேண்டும். இரவு பொழுதில் ஒருவாரம் தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் கால்கள் பளிச்சிடும்.
  • சூடான நீரில் தேயிலை அல்லது டீ பேக்கை போட்டு ஊறவைக்கவும். சூடு குறைந்ததும் அந்த நீரில் அரை மணி நேரம் கால்களை ஊறவைக்கலாம். கால்கள் சுத்தமாகுவதோடு துர்நாற்றமும் நீங்கிவிடும்.
  • 8 கப் சூடான நீரில் ஒன்றரை டீஸ்பூன் வினிகரை கலக்கவும்.சூடு குறைந்ததும் கால்களை அதில் கால் மணிநேரம் நனைத்துவிட்டு கழுவிவிடலாம். வினிகர் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
  • வெதுவெதுப்பான நீரில் சில துளி லாவண்டா் எண்ணெய் கலந்து கால்களை சிறிது நேரம் நனைக்கலாம்.காலையும், மாலையும் இவ்வாறு செய்து வருவது கால்களுக்கு நன்மை பயக்கும்.
  • கால்களில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை போக்குவதற்கு முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரையும் உபயோகிக்கலாம்.
Previous Post Next Post