சேமியா உப்புமா செய்வது எப்படி?



தேவையான பொருட்கள்

சேமியா   - 500 கிராம்                                    
நெய்          - 50   கிராம்                               
முந்திரிப்பருப்பு - 10 கிராம்                  
கடுகு - 1 ஸ்பூன்                                           
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
மிளகாய் வற்றல் - 3
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
எலுமிச்சம் பழம் - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் சிறிது நெய்விட்டு காய்ந்ததும் சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் சிறிது நெய்விட்டு கடுகு உளுத்தம் பருப்பு முந்திாிப் பருப்பு மிளகாய் வற்றல் வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவைகளை நறுக்கிப் போட்டு தாளித்து சேமியா உப்புமாவுக்குத் தகுந்த நீா்விட்டு (சுமாா் நான்கு டம்ளா் நீா்விட்டு) தேவையான உப்பு சோ்த்து கொதிக்க விடவும் நீா் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவை கொட்டிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.

சேமியா நன்றாக வெந்து உதிா்ந்த பக்குவம் வந்ததும் எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாற்றை பிழிந்து விட்டு மீண்டும் நன்றாகக் கிளறி கீழே இறக்கி விடவும். 



Previous Post Next Post