தொட்டது எல்லாம் வெற்றியில் முடியும் சிம்ம ராசியினரே... சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

சிம்ம ராசியினரே, இதுவரை உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இதற்கு மேல் உங்களின் ராசிக்கு 6ஆம் இடத்திற்கு செல்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அயன, சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும். பூர்வீக சொத்துக்களில் ஏதேனும் ஒரு பங்கு உதவிகரமாக அமையும். தாயாருடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களுக்கு உதவும் பொருட்டு ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்கவும்.

இதுவரை திருமணத்தடை இருந்துவந்த பெண்களுக்கு விரைவில் திருமண யோகம் கைகூடும். இளைய சகோதரர்களிடம் சமரசப்போக்கை கடைபிடிக்கவும். ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழில் சார்ந்த புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது மற்றவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவது நன்மையை தரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். சங்கம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

பொதுத்துறையில் இருப்பவர்கள் சற்று நிதானப்போக்கை கடைபிடிப்பது அவசியம். ஆன்மிகம் சார்ந்த பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கப்பெறுவீர்கள். பூர்வீகத்தில் இதுவரை இருந்துவந்த சஞ்சலங்கள் மறைந்து புதுமை பிறக்கும்.

பயணங்களால் உடல்சோர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். சங்கீதம் மற்றும் நாட்டிய கலைஞர்களுக்கு ஏற்றமான காலம் இது. பொதுமக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். இவர்களின் தனித்திறமை வெளிப்படுவதற்கான சூழல் அமையும். விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு பாராட்டுகளையும், பரிசுகளையும் குவிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் இருந்துவந்த பல குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பாதியில் நின்று கொண்டிருக்கும் பல வேலைகளை சிறப்பாக நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

பதவி உயர்விற்காக காத்திருப்பவர்களுக்கு பொன்னான காலம் இது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். பணி நிமிர்த்தமாக வெளியூர் செல்வதற்கான சூழல் அமையும்

குறைவான விளைச்சல் இருந்தாலும் வருமானம் தொடர்பான சிக்கல் குறைவாக இருக்கும். கால்நடைகள் தொடர்பான புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்.

Previous Post Next Post