பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் பன்னீர்
பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுதான் பன்னீர்.இறைச்சிகள் மற்றும் பருப்புகளைப் போலவே பன்னீரிலிருந்தும் புரதச்சத்தானது அதிகம் கிடைக்கிறது.

அதிலும் சாதாரண பாலில் உள்ளதை விட பன்னீரில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது.

பன்னீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதனை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனை பெற முடியும்.

இதனை தொடர்ந்து சாப்பிடுவதனால் பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • காலை நேரங்களில் பன்னீர் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி நாளின் தொடக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது.
  • இரவு நேரங்களில் சாப்பிடுவதால் நன்கு தூக்கம் வரும். ஜீரணக்கோளாறு உள்ளவர்கள் மட்டும் இரவில் பன்னீர் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • கட்டுமஸ்தான உடலை விரும்புபவர்கள் பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மேலும் இது பசியை கட்டுப்படுத்துவதால் அதிக உணவு உட்கொள்வதை தடுக்கிறது.
  • பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது.
  • பன்னீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் செலேனியம் சரும பொலிவை அதிகரிக்கும்.
  • உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது பன்னீரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்கிறது.
  • இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் பன்னீர் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது குறைகிறது. இது ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

Previous Post Next Post