முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
இது ஆண், பெண் என இருபாலாருக்கும் ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்து விட்டது.
இதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை, பணத்தை செலவழிக்க அவசியமில்லை. ஏனெனில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
அந்தவகையில் சீக்கரம் முடிவளரச்சியை அதிகரிக்க ஒரு சூப்பர் ஹேர் பேக் எப்படி தயாரிக்கலாம், எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- கற்றாழை ஜெல் - 5 டீஸ்பூன் அளவு
- வெந்தயம் - 3 டீஸ்பூன்
- கறிவேப்பிலை இலை - தலா - 1 கைப்பிடி
- செம்பருத்தி இலைகளையும் காம்பு நீக்கியது - தலா - 1 கைப்பிடி
- தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
- தேங்காய்ப்பால் - 5 டீஸ்பூன்
- நெல்லிக்காய் துண்டு - 3 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கொடுத்திருக்கும் எல்லா பொருள்களையும் மிக்ஸியில் அடித்து நைஸாக அரைத்து இதை கூந்தலில் ஸ்கால்ப் மற்றும் அடிப்பகுதி முழுக்க தடவி 30 முதல் 40 நிமிடங்கள் வரை அப்படியே ஆறவிட்டு மேல் ஹேர் கவர் வைக்கவும். இது கூந்தலின் உஷ்ணத்தை தணிக்க செய்யும்.
பிறகு கூந்தலை மைல்டாக ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்கலாம். நேரடியாக சூரிய ஒளியில் அல்லது மின் விசிறியின் கீழ் காயவிடுவது நல்லது.
முடி வளர்ச்சியே இல்லை என்பவர்கள் வாரம் ஒருமுறை இந்த ஹேர் பேக் போட்டு வந்தால் கூந்தலின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். ஆண்கள் பெண்கள் எல்லாருக்குமே ஏற்றது இந்த ஹேர் பேக் என்று சொல்லலாம்.