முடி கொட்டும் செலவே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்

தலைமுடி அடர்த்தியாக அழகாக இருக்க வேண்டும் என்பதே பெண்கள் மற்றும் ஆண்களின் பொதுவான விருப்பம்.

ஆனால் பரபரப்பான வாழ்க்கையில் பலருக்கும் முடி உதிரும் பிரச்சினை அதிகமாகவே ஏற்படுகிறது.

இதற்காக பல வித ஷாம்பு, கண்டிசனர்களை நாம் உபயோகப்படுத்தி பார்த்திருப்போம். ஆனால் இயற்கையான முறையில் முடிகளை பாதுகாப்பது இன்னும் நல்ல பலன்களை தரும்.

இதுபோன்ற வீட்டு வைத்தியங்கள் முடி நன்றாக வளர்வதற்கு மட்டுமல்லாமல், முடி கொட்டுவதை குறைக்கவும் உதவும்.

அந்தவகையில் தற்போது முடி உதிர்வை கட்டுப்படுத்த என்ன பண்ணலாம் என இங்கு பார்ப்போம்.

கொத்தமல்லி

கொத்துமல்லி தழையை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல் குழைத்து உச்சந்தலையில் ஸ்கால்ப் பகுதி முதல் கூந்தலுக்கு தடவி ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து கவர் போடவும்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இதை பயன்படுத்தலாம்.

கேரட்

கேரட்டை தோல் சீவி அரை வேக்காடாக வேக வைக்கவும். அந்த தோலோடு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதை பேஸ்ட் போல் ஆக்கி கூந்தல் முழுக்க தடவிவிடவும்.

பிறகு தலைக்கு ஹேர் கவர் போடவும். அதிகமாக நீர்த்தில்லாமல் பேக் போன்று இருக்கலாம். 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவைத்து தேய்த்து குளிக்கலாம். மிதமான ஷாம்பு பயன்படுத்தினால் போதும். இது கூந்தல் வளர்ச்சியோடு கூந்தலை மினுமினுக்கவும் செய்யும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாறுடன் முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு சேர்த்து நன்றாக அடிக்கவும்.

இதை நன்றாக கலந்து 45 நிமிடங்கள் வரை கூந்தலில் ஊறவிட்டு பிறகு கூந்தலை சுத்தமான நீரில் அலசி எடுத்து பிறகு ஷாம்பு கொண்டு அலசி எடுத்தால் போதும். முடிக்கு தேவையான ஊட்டம் கிடைக்கும். மாதம் ஒரு முறை செய்தால் போதும்.

வெங்காயம்

சாம்பார் வெங்காயம் - 15 முதல் 20 வரையிலான எண்ணிக்கையில் எடுத்து மேல் தோலை உறித்து சாறு பிழியவும். அந்த சாறை அப்படியே தடவும் போது சமயத்தில் எரிச்சல் வரவும் செய்யும்.

சாறுடன் ஒரு பங்கு ரோஸ் வாட்டர் கலந்து பஞ்சு உருண்டையால் கூந்தல் முழுக்க ஸ்கால்ப் பகுதியில் ஒத்தி ஒத்தி வைத்து எடுத்து பிறகு எஞ்சியிருக்கும் சாறை தடவி இலேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். பிறகு 1 மணி நேரம் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும்.

பீட்ரூட்

பீட்ரூட் மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக நறூக்கி இலேசாக வேக வத்து மிக்ஸியில் அரைத்து அதை கூந்தல் முழுக்க தடவ வேண்டும்.

கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து தடவி ஹேர் கவர் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

பிட்ருட் சேர்ப்பதால் கூந்தல் சிவப்பாகுமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம். இது முடியின் ஆழம் வரை சென்று நிறத்தை கொடுக்கும் என்பதால் இளநரை விரைவில் எட்டிபார்க்காது.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து தயிர் கலந்து பேஸ்ட் போல் குழைத்து முடிக்கு பேக் போடலாம்.

இது 2 முதல் 3 மணி நேரங்கள் வரை வைத்திருந்து ஹேர் கவர் போட்டு பிறகு கூந்தலை நன்றாக தேய்த்து அலசினால் போதும். பொடுகு, பேன் இருந்தால் இதில் கைப்பிடி துளசி சேர்த்துகொள்ளலாம்.

வாரம் ஒரு முறை மாதம் இருமுறை இதை பயன்படுத்தலாம். எல்லாவயதினரும் இதை பயன்படுத்தலாம்.

أحدث أقدم