கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய அந்த நாளை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, வெள்ளிக்கிழமை தினத்தை பற்றிய ஒரு சின்ன விஷயத்தை இன்று நாம் தெரிந்து கொள்வோம். பணத்தை சேமிப்பதற்கும், கடனை தீர்ப்பதற்கும், வெள்ளிக் கிழமைக்கும், நிறையவே சம்பந்தம் உண்டு.
முதலில் வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு உரிய தினமாக சொல்லப்பட்டுள்ளது. சுக்கிரனுக்கு உகந்த இந்த தினத்தில் நாம் பணத்தை சேமிப்பதற்கான செயல்பாடுகளை தொடங்கலாம். சுக்கிர பகவானின் ஆதிக்கமானது பிரபஞ்சத்திலிருந்து பூமிக்கு அதிகமாகப் பெறப்படுவதும் இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் தான். முடிந்தவரை யாருக்கும், வீட்டிலிருக்கும் பெண்களது கையால் பணத்தை கொடுக்காமல் இருப்பது நல்லது. சுக்கிர பகவானிடமிருந்து பெறக்கூடிய ஆற்றலை, மகாலட்சுமியின் அம்சத்தில், வீட்டில் இருக்கும் பெண்கள், தங்களுடைய கையால் வெளியில் கொடுக்கும் பட்சத்தில், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையும் என்றும் நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது.
முடிந்தால் வெள்ளிக்கிழமை தினங்களில் உங்கள் வீட்டு அரிசி மூட்டையில், ஒவ்வொரு ரூபாய் நாணயத்தை போட்டு வாருங்கள். உங்களுடைய வீட்டில் சேமிப்பு உயர்ந்து லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். சரி, இப்போது கடனை நாம் எந்த கிழமையில் திருப்பித் தந்தால் கடன் பிரச்சினை தீரும் என்பதை தெரிந்து கொள்வோமா?
- வெள்ளிக்கிழமை அன்று, அஷ்டமி திதி வரும் பட்சத்தில் அன்றைய தினத்தில், அந்த வீட்டில் இருக்கும் ஆண்களது கையால் கடன் தொகையை, திருப்பிக் கொடுக்கலாம். அப்பக்கூட பெண்கள், உங்கள் கையால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க கூடாது.
- மற்ற சமயங்களில் வெள்ளிக்கிழமை அநாவசியமாக யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது. இருப்பினும் அஷ்டமி திதி அன்று வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் நாம் யாரிடம் கடன் வாங்கி இருக்கின்றோமோ, அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினோம் என்றால், அந்த கடன் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதத்தையும் நாம் பெற்று நம்முடைய வாழ்க்கையில், இனி வரும் காலங்களில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன் நல்ல பலன் கிடைத்தால் இதையே பின்பற்றி கொள்ளலாம்.