உங்கள் வீட்டில் தீய சக்திகளை விரட்டணுமா? கால பைரவருக்கு இதை செய்திடுங்கள்

 

கால பைரவரின் தேவகணமாக விளங்கும் வெண் கடுகை கொண்டு பூஜை செய்து தூபம் போட்டால் தீய சக்திகளை விரட்டி விடலாம்.

தெய்வீக தன்மை கொண்டது வெண் கடுகு, இச்செடிகள் குளிர்ச்சியை தருபவை, இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.

வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.

எனவே ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின்னர் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும்.

இந்த புகையை பூஜையறை உட்பட அனைத்து அறைகளிலும் பரவச் செய்ய வேண்டும், இதனால் அனைத்து விதமான சங்கடங்கள் நீங்குவதுடன் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

أحدث أقدم