நல்லெண்ணையை வைத்து எப்படி எல்லாம் அழகை மெருகூட்டலாம் என தெரிந்து கொள்ளணுமா?


பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் தான்.

இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும், கூந்தல் அழகிலும் கூட பெரிதும் பங்கு வகிக்கின்றது.

அந்தவகையில் தற்போது நல்லெண்ணையை வைத்து எப்படி எல்லாம் அழகை மெருகூட்டலாம் என இங்கு பார்ப்போம்.

  • தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
  • ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
  • நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
  • பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
  • நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
  • உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.
  • நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்

أحدث أقدم